கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

30 வருடம் நிறைவில் எகெட் கரித்தாஸ்

P1050136 திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் 30 வருட நிறைவு விழா இன்று நடைபெற்றது. புனித மரியாள் கல்லூரி திரேசா கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி யோசெப் பிற்றேரி பிரதம விருந்தினராகவுக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய தந்தை கலாநிதி ஹரல்ட் அன்ரனி பெரேரா அவர்களும் விருந்தினராகக் கலந்து கொண்டார். விசேட விருந்தினர்களாக வணக்கத்திற்குரிய கலாநிதி யோசெப் பொன்னையா அவர்களும், மேலதிக அரசாங்க அதிபர் அ,நடராசா, நகராட்சி மன்ற தலைவர் ச.கௌரிமுகுந்தன், எகெட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய அன்ரனி லீயோ கரித்தாஸ் பிரான்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆரோக்கியம் அவர்களும் கலந்து கொண்டனர். 30 வருட நிறைவை ஒட்டி விசேட  மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. P1050140 P1050142P1050145எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சமூகபபணிகளுக்கு பல்வேசறு விதங்களிலும் உதவியவர்களும். சேவையாற்றியவர்களும் பணிப்பாளர் அருட் தந்தை பிரான்சிஸ் சேவியர் டயஸ் அவர்களால் நினைவு பரிசு வழங்கி கைளரவிக்கப்பட்டனர்.

நவம்பர் 6, 2009 - பதிந்தவர் tconews | எகெட் கரித்தாஸ் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்