மாரடைப்பைத் தவிர்க்கும் இஞ்சி.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம்.
இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற் பாடுகுன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
