பாராளுமன்ற உரை
பாராளுமன்றத்தில் 13.11.2008 இல், 2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு திருகோணமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆற்றிய உரை
கௌரவ சபாநாயகர் அவர்களே,
2009 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றக் கிடைத்த சிறிய வாய்ப்புக்கு நன்றி.
யுத்தம் 90 சதவீதம் முடிந்துவிட்டது, கிழக்கின் உதயத்தைப் போன்று, வடக்கில் வசந்தம் வரப்போகின்றது என்று இந்த நாட்டு மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த அரசாங்கம், இந்த நாட்டில் என்றுமில்லாதவாறு வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்படும் யுத்தத்திற்கு 177 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டையும் ஒரு யுத்த ஆண்டாகவே தொடர திடசங்கர்ப்பம் ப+ண்டுள்ளது என்பது வெளிப்படை.
போர் சூழல், சுனாமி அனர்த்தம், தொடர்ந்து நடைபெற்ற இராணுவ நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும், காலா காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த மலையக மக்களுடைய அபிவிருத்திக்கும், இவ்வரவு செலவுத் திட்டத்தில் போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடக்கம் உப்பு வரி வரை அனைத்திற்கும் வரிகளை விதித்து வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் துன்பபடுகின்ற மக்களை மேலும் கஸ்;டத்துக்குள்ளாக்கியுள்ளது. யுத்தத்தை காரணமாக காட்டி இந்நாட்டு மக்கள் சகலரையும் வஞ்சிக்கின்ற ஒரு வரவு செலவுத்திட்டமாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
மட்டக்களப்பு படுவான்கரை, வாகரை, கதிரவெளி வெருகல் ஈச்சிலம்பற்று, மூதூர் கிழக்கு கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் விமானத்தாக்குதல், பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி 350 பேருக்கு மேற்பட்டோர் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட உடல் சிதறி இறந்துள்ளார்கள். 500 பேருக்கு மேல் அங்கவீனமுற்றும், 1500 பேருக்கு மேல் காயப்பட்டும் உள்ளனர்.
இவர்களின் வீடு வாசல்கள், உடமைகள், கால்நடைகள், வயல் நிலங்கள், தோட்ட நிலங்கள், பாடசாலைகள், கோயில்கள், வைத்தியசாலைகள், பொது கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. மக்கள் இடம்பெயர்ந்த பிற்பாடு தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாதுகாப்பு படையினர், மக்களின் பெறுமதியான உடமைகளை பாதுகாத்துக் கொடுக்கவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் இருக்கின்றது. மூதூர் கிழக்குப் பிரதேசத்திலும், பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்திலும் மின்சார விநியோகத்தில் இருந்த, பாரிய மின்கம்பங்களும், கேபிள்களும் முற்றாக அகற்றப்பட்டதை அரசாங்கம் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான், சேனைய+ர் ஆகிய கிராமங்களில் 1912 குடும்பங்களைச் சேர்ந்த 6138 அங்கத்தவர்கள் இறுதியாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இடம்பெயர்ந்து 3 வருடங்களுக்கு மேலாகியும், மீள்குடியேற்ற போதியளவு கால அவகாசம் இருந்தும், அடைமழை பெய்யும் நேரத்தில் மக்களின் அடிப்படை வசதிகளைச் செய்யாது மீள்குடியேற்றுவது, ஒரு திட்டமிடப்படாத செயலாகவே கருத வேண்டியுள்ளது.
இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்த பெரும்பாலான வீடுகளும், பாடசாலை போன்ற பொதுக்கட்டிடங்களும் எறிகணைத் தாக்குதல்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் பெரும் மழையில் ஒதுங்குவதற்கு கூட இடவசதி இன்றி மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மின்சார வசதிகள், போக்குவரத்து, வைத்திய வசதிகள் செய்து கொடுக்கபடாமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களை; எதிர்நோக்கி வருகின்றனர். பாடசாலைகளும் மாணவர்கள் கற்க கூடிய வசதி வளங்கள் இன்றி நடைபெறுகின்றது.
திருக்கோணேஸ்வர ஆலயத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய சம்ப+ர் பிரதேசத்தில், ப+ர்வீகமாக வாழ்ந்து வந்து மக்களின் வீடுவாசல்களை முற்றாக அழித்தது மட்டுமல்லாமல், தாம் விரும்பியபடி அவர்களின் பயன்தரு காணிகளுக்கு ஊடாக பாரிய வீதிகளை அமைத்து உயர் பாதுகாப்பு வலயமாக்கியுள்ளது. இந்த வலயத்துக்குள் வாழ்ந்த 1637 குடும்பங்களைச் சேர்ந்த 6529 உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இப்பிரதேசத்தில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு மக்கள் குடியிருப்புகள் அல்லாத நிலவசதிகள் இருந்தும், மக்கள் ப+ர்வீகமாக குடியிருந்த உறுதிக் காணிகளில் அனல் மின்நிலையம் அமைக்க அரசாங்கம் விடாப்பிடியாக எடுக்கும் முயற்சி, தமிழ் மக்கள் என்ற ஒரே ஒரு காரணத்தினால் பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் ஒரு செயலாகவே மக்கள் கருதுகின்றனர்.
கட்டுநாயக்க, கொலன்னாவ, களனிதிஸ்ஸ போன்ற உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு அருகில்; மக்கள் செறிவாக வாழும் பொழுது, சம்ப+ர் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தமது கிராமங்களைக் கூட சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுமல்லாமல் பொருத்தமற்ற இடங்களில் அவர்களை கட்டாயப்படுத்தி குடியமர்த்த எடுக்கும் முயற்சி எந்த வகையில் நியாயமானது எனக் கேட்கின்றேன்.
கொட்டியாரக்குடா கடல் சுற்றாடலில், அமைந்திருக்கும் சேனைய+ர், கட்டைபறிச்சான், மூதூர், கிண்ணியா, சீனன்குடா, திருகோணமலை ஆகிய இடங்களில் செறிவாக வாழும் மக்கள் கடற்தொழில் ரீதியாகவும், சூழல் சுற்றாடல் மாசடைவதன் மூலமாகவும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.
அனல் மின்நிலையம் அமைய தெரிவு செய்திருக்கும் உத்தேச இடம் இப்பிரதேச வாழ் மக்களிடத்திலோ, அல்லது அம்மக்களின் பிரதிநிதிகளிடமோ ஆலோசனை பெறப்படாமல், அரசாங்கம் தன்னிச்சையாக தெரிவு செய்திருக்கின்றது. இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையும், மீன்பிடியையும் தமது முக்கிய தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்களின் எதிர்காலம் சூனியமாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவ நடவடிக்கையின் போது, மூதூர் கிழக்கைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது மூதூர் கிழக்கு மீள்குடியேற்றம் நடைபெறும் பொழுது சம்ப+ர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா ஆகிய கிராம மக்களும் மீள்குடியேற விரும்புவது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இவ்வுரிமை மறுக்கப்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறும் செயலாகும். இவ்விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான முறையில் மீள் பரீசிலினை செய்ய வேண்டுமென இவ் உயரிய சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆதிவாசிகளின் கிராமங்களைப் பாதுகாத்தல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கி செம்மையாகச் செயற்படுத்த எண்ணிய அரசாங்கம், திருகோணமலை மாவட்டத்தில் நல்லூர், பாட்டாளிபுரம், வீரமாநகர், மலைமுந்தல் ஆகிய இடங்களில் வாழ்ந்த ஆதிக் குடிகளின் வீடு வாசல்கள,; உடமைகள், வயல் நிலங்கள், தோட்ட நிலங்கள், கால்நடைகள் இராணுவ நடவடிக்கைகளினால் அழிக்கப்பட்டு அப்பகுதியில் மீள் குடியேற்றம் நடைபெறும் பொழுது, ஒரு குடும்பத்திற்கு 10 அல்லது 20 பேர்ச் காணிகள் சரியாக அளந்து வழங்கப்படுகின்றது.
பாரம்பரியமாக வாழ்ந்த இம்மக்களுக்கு ஆரம்பத்தில் வீட்டுத் திட்டங்களையோ, பொருளாதார வசதிகளையோ அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை. இம் மக்களைப் பொறுத்த வரையில் கிராமிய பொருளாதாரத்திதை நம்பி வாழ்ந்தவர்கள். 2-3 ஏக்கர் காணியில் சேனைப் பயிர்செய்கையுடன், ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகளை வளர்த்து கிராமிய பொருளாதாரத்தில் சீவித்து வந்தவர்கள்.
நாட்டின் வேறு பிரதேச குடியேற்றங்களில் நடைபெறும் பொழுது 2-3 ஏக்கர் வயல் நிலம், 1 ஏக்கர் மேட்டு நிலம், வசதியான வீடு, மின்சாரம், போக்குவரத்து போன்ற சகல வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கம், நல்லூர், பாட்டாளிபுரம், வீரமாநகர், மலைமுந்தல் ஆகிய கிராமங்களில், தங்களது கடின உழைப்பால் வாழ்ந்த ஆதிக் குடிகளை 10 அல்லது 20 பேர்ச் காணிக்குள் முடக்கி அவர்களின் கிராமிய பொருளாதாரத்தை சீரழிப்பது எந்த வகையில் நியாயமென கேட்க விரும்புகின்றேன்.
ஈச்சிலம்பற்று கிராம மக்களின் குடிமனைப் பிரதேசத்தில் இன்று இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்த 75 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு உரிமை மறுக்கப்பட்டு, 2 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள உடப்புக் கேணி, சின்னக்குளம் என்ற இடங்களில் வசதி குறைந்த தற்;காலிக கொட்டில்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
சிறிய மழைக்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய நிரந்தர வீட்டு;த்திட்ட வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசு சார்பற்ற நிறுவனங்கள் முன் வந்த பொழுதும், வீடு கட்டுவதற்கு சொந்த காணி இல்லாமல், வீட்டு வசதியினை இழக்க நிலை இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு என்று பெருமையுடன் கூறும் அரசாங்கம், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அறியாதிருப்பது வேதனையாகவிருக்கின்றது. மக்கள் தொழில் வாய்ப்பின்றி அரை குறையாக வழங்கப்படும் நிவாரணங்களை நம்பி வாழும் நிலை தொடர்கின்றது. கிராம வீதிகள் குன்றும், குழியுமாக மக்களின் போக்குவரத்திற்கு உதவாத நிலையில் இருக்கும் பொழுது, கிழக்கின் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சேருவில் இருந்து பொலநறுவைக்கு பாரிய வீதியும், வாகரையிலிருந்து பொலநறுவைக்கு பாரிய வீதியும் அமைக்கப்பட்டு இவ்வீதிகள் இணைக்கப்படுகின்றது. இதே போன்று மூதூர் கிழக்குப் பிரதேசத்திலும் வீதிகள் அமைக்கப்படுகின்றது. அமைக்கப்படும் இப்புதிய வீதிகள், வாழ்வு இழந்த இப்பிரதேச மக்களுக்கு எவ்வித பிரியோசனத்தையும் தரப்போவதில்லை. இந்த வீதி அமைப்பு பிண்ணணியில் புதிய குடியேற்றங்கள் நடைபெறவிருப்பதாக அறிய முடிகிறது.
பாரிய இராணுவ நடவடிக்கை மேற் கொள்ளும் பொழுது மக்களின் நன்மைக்காகவே இந்த இராணுவ நடவடிக்கை என மேதகு ஜனாதிபதி அவர்கள் கூறியிருந்தார். 3 வடங்களுக்கு மேலாகியும், கிழக்கு வாழ் மக்களுக்கு குறிப்பிடக் கூடிய எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை. இது தான் கிழக்கின் உதயம். இதே போன்று தான் வடக்கிலும் வசந்தம் ஏற்படப் போகின்றது.
வன்னிப் பகுதியில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வந்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் வலுக் கட்டாயமாக அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டுள்ளன. இது நாட்டுமக்களும், சர்வதேசமும் அறிந்த உண்மை.
புலிகளுடன் யுத்தம் செய்து கொண்டு தாங்கள் வன்னிக்கு கடந்த 3 மாதங்களில் மூவாயிரம் மெற்றிக்தொன் உணவினை அனுப்பியுள்ளதாக கூறும் அரசாங்கம், வன்னியில் தினமும் மக்கள் மீது வான் தாக்குதல், எறிகணைத் தாக்குதல்கள் நடத்தி தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர வைக்கின்றது. இதனால் வழங்கப்படும் நிவாரணங்களை உரிய வேளையில் பெற முடியாத சூழ்நிலையும், பெற்ற உணவுகளை நிம்மதியாக உண்ண முடியாத அவல நிலையும் தொடர்கின்றது.
மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் உணவு. உணவுவை உண்பதற்காக மனிதன் உயிர் வாழ்வதில்லை என்பதை அரசாங்கம் மனிதாபிமான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் அம்மக்களின் உயிர் பாதுகாப்பிற்கு முதலில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
வன்னிப் பிரதேசத்திற்கு வேண்டிய மருந்துவகைகள், ஒட்சிசன் சிலிண்டர்களும் ஏனைய அத்தியாவசிய பொருட்களும் அனுப்புவதில் பல தடைகள். சுகாதார சீர்கேடுகளினால் மிக வேகமாக பரவிவரும் தொற்று நோய்களினாலும், பாம்புக் கடியினாலும் உயிர் ஆபத்தை தினமும் மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர். 190 பாடசாலைகளைச் சேர்ந்த 55,000 மாணவர்கள் தங்களுடைய கல்வியை தொடர முடியாதிருக்கின்றனர். இந்நிலையில் ஒமந்தை சோதனைச் சாவடியும் மூடப்பட்டுள்ளது.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சிரேஷ்ர ஆலோசகரும், சகோதரருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ அவர்கள் புதுடெல்லி சென்று ‘பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம’; என்று உத்தரவாதம் அளித்த பிற்பாடும், விமான மற்றும் எறிகனைத் தாக்குதல்களினால் குழந்தைகள், மாணவர்கள் உட்பட 8 பேருக்கு மேற்பட்டோர்; கொல்லப்பட்டதுடன், 40 பேருக்கு மேற்பட்டோர்; படுகாயடைந்தும் உள்ளனர். 42 வீடுகளுக்கு மேல் முற்றாகவும், 20 வீடுகள் பகுதியளவிலும், 18 கடைகள் முற்றாகவும் சேதடைந்திருக்கின்றன. அத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலை, கிளிநொச்சி மத்திய கல்லூரி, குமாரபுரம் முருகன் ஆலயம் ஆகியனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
போருக்கு முடிவு போராக ஒரு நாளும் இருக்க முடியாது. சமாதானமே முடிவாக அமையும். இதனை அடைய கௌரவம் பாராது விட்டுக் கொடுப்புகளுடன், உளச்சுத்தியுடன் செயற்பட வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலமே தீர்வுகாண முடியமென தீர்க்கதரிசனம் உள்ள அரசியல்வாதிகளும், புத்தி ஐPவிகளும், சர்வதேச சமூகமும் வலியுறுத்திவரும் இவ்வேளையில் வகை கூற வேண்டிய பொறுப்புள்ள அரசாங்கம் இவைகளை உதாசீனம் செய்யாமல், போரை உடன் நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வைக் காண முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்தி எனது பேச்சை நிறைவு செய்கின்றேன். நன்றி. வணக்கம்
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
