கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சிறந்த குழு இந்துக் கல்லூரி

சிறந்த குழு இந்துக் கல்லூரிதிருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்திய மாவட்ட ஒன்று நிகழ்வில் சிறந்த குழுவாக 2வது திருமலை சாரணர் குழு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி தெரிவாகியது.


அலெக்ஸ்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சர்வோதயம் நிலையத்தில் 3 தினங்கள் இவ் ஒன்றுகூடல் நடைபெற்றது. வியாழக்கிழமை (11.09.2008) மதியம் 2.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இம் முகாம் சனிக்கிழமை (13.09.2008) மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்தது.
இதில் புனித சூசையப்பர் கல்லூரி, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி , உவர்மமலை விவேகாநந்தா கல்லூரி, விக்நேஸ்வரா மகா வித்தியாலயம், புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம். புனித வளனார் தமிழ் வித்தியாலயம், , நாமகள் வித்தியாலயம் என்பன கலந்து கொண்டிருந்தன.

செப்டம்பர் 13, 2008 - பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி, சாரணீயம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்