சீருடை விநியோகம்
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் முன்பள்ளிப பாடசாலை சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றது. கல்வி பிரிவினரால் இவை வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
பாலையூற்று சாரதா முன்பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள் 55 பேருக்கு பாதணிகளும், அவர்களுக்கான சீருடைத்துணிகளும் இவ்வாறு இன்று செவ்வாய்க்கிழமை (28.08.2008) காலை வழங்கி வைக்கப்பட்டது. இது போன்று பாரதிபுரம் பாரதி முன்பள்ளி சிறுவர்கள் 15 பேருக்கும் இவ்வாறு பாதணிகளும், சீருடைத்துணிகளும் வழங்கப்பட்டது.
கடந்த வாரம் இச் சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பாடசாலை புத்தக பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
