ஜப்பான் குழு விஜயம்.
ஜப்பான் கரித்தாஸ் நிறுனத்தின் குழு ஒன்று திருக்கோணமலைக்கு இரண்டு நாள் விஜயம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை 24.08.2008 திருக்கோணமலைக்கு வந்திருந்தனர்.
ஜப்பான் கரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர், ஆயர் பேரருட்திரு
கிகுசி , ஜப்hன் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்பணி டைசிகுய் , திட்ட உத்தியோகத்தர் செல்வி சவாகோ இனைக் ஆகிNயுhர் இக்குழுவில் அடங் கியிருந்தனர். இவர்களை செடெக் அமைப்பின் சுனாமி நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் க.தெய்வேந்திரரராஜா அவர்கள் அழைத்து வந்திருந்தார்.
திருக்கோணமலை மாவட்டத்தில் சுனாமி யின் பின்னரான வேலைத் திட்டங்களை பார்வையிடுவது இக்குழுவின் நோக்கமா கும். ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு சீனக்குடா சனசமூக நிலையத் திற்கு சென்ற இவர்கள் அங்கு சமாதான, கல்வி பிரிவினரால் ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர் பின்னர் வந்திருந்த மக்களோடு தற்போதய நிலமைகள் பற்றி
கலந்துரையாடினார்கள். இதன் பின்னர் தம்பலகாமம் பகுதிக்கு விஜயம் செய் தனர். ஆங்கு பொற்கேணி கிராம அபி விருத்தி சங்கத்தில் சுகாதார உளவளத் துணை பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வில்பங்கு பற்றினார்கள். அதன்பின்னர் அப்பிரதேச மக்களோடு தற்போதய நிலமைகள் பற்றி பேசி அறிந்து கொண்டார்கள்.
மாலை 3.30 மணிக்கு பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோணேசபுரி மீள்குடியேற்ற கிராமத்திற்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்ட வீடுகளை சுற்றிப் பார்வையிட்டனர். அதன் பின்னர் சனசமூக நிலைய கட்டடிடத்தில் பயனாளிகளைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களை; கேட்டறிந்து கொண்டார்கள். பயனாளிகள் பெற்றுக் கொண்ட பயிற்சிகள், அதன் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்ட நன்மைகள் பற்றி அறிந்து கொண்டார்கள்


திங்கட்கிழமை 25.08.2008 காலை எகெட் கரித்தாஸ் அலுவலகத்திற்கு வந்த குழுவினர் அங்கு ஊழியர்களைச் சந்தித்து அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் பற்றி கேட்டறிந்து கொண்டனர். பிரிவுகள
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
