கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

வாழ்வாதாரம்

திருக்கேர்ணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் கடல் கோளால் பாதிக்க்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகி;றது.  கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாமரைவில் என்னும் இடத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான உதவிகளும், தையல் தொழில் செய்வதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டது.

  கடந்த வாரம் கடற்படையினரால் கிண்ணியா கடல் பரப்பில் மீன் பிடிப்பதற்கு விதிக்க்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் தடை தளர்த்த்ப்பட்டதைத் தொடர்ந்து அதிகளவானவர்கள் தமது தொழிலினை மீள ஆரம்பித்துள்ளனர். 

இங்குள்ளவர்களில்  11 பேருக்கு கடல் தொழில் செய்வதற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. 5 பேருக்கு  மீன்பிடி வள்ளங்களும் வலைகளும், ஒருவருக்கு மீன்பிடி வள்ளமும்,  5 பேருக்கு மீன்பிடி வலைகளும், 2 பேருக்கு தையல் இயந்தரங்களும் அவற்றுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

ஏகெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ்  சேவியர் டயஸ் அவர்கள்  கடந்த புதன்கிழமை (20.08.2008) காலை இவற்றினை உவர்மலையில் உள்ள களஞ்சியசாலையில்  வைத்து வழங்கி வைத்தார்.

ஆகஸ்ட் 22, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | , | இதுவரை மறுமொழிகள் இல்லை

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்