பழையமாணவர் தினம்
திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர் தினம் 30.06.20028 ஆகும். இவ்வருடத்துக்கான இத்தினம் ஞாயிற்றுக்கிழமை 06.07.2008 மாலை கல்லூரியில் கொண்டாடப்படுகின்றது.
எதிர்வரும் 12ஆம் திகதி பழைய மாணவர்கள் மத்தியில் விளையாட்டுப் Nபுhட்டிகள் கல்லுஸரி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. கிரிக்கட், உதைபந்து,கரம், கரப்பந்து, கூடைப்பந்து,மேசைப்பந்து பொன்ற போட்டிகள் பழைய மாணவர்கள் மத்தியல் நடத்தப்படவுள்ளது.
இதில் பழைய மாணவர்களஷளை எதிர்த்து ஆசிரியர்கள், தற்போதய மாணவர்கள், தனித்தனியாக மோதவுள்ளனர்.
இரண்டாவது வருடமாக இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை அதிபர் மா.இராசரெத்தினம் தலைமையிலான பழைய மாணவர் சங்டக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பழைய மாணவர்களை இணைந்து கொள்ளுமாஞறு அழைப்புக்கள விடுக்கப்பட்டுள்ளது.
எத்தினமும் அந்தந்த நாட்களில் நினைவு கூரப்படுவது பொருத்தமானது என கதிரவன் நினைக்கின்றான். எதிர்வரும் காலவங்களில் இதனை கருத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற. 30.06.2008 ஆம் திகதி பழைய மாணவர் தினம் என்பதற்கான எவ்வித அடையாளங்களும் கல்லூரியில் காணப்படாமை மனதில் வருத்தத்தை ஏற்படுத்தவுதாக இருக்கின்றது.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
