வினாவிடைப்போட்டி
திருக்கோணமலை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பாடசாலை மாணவர்கள் மததியில் பொது அறிவு வினாடி விடைப் போட்டி ஒன்றினை நடத்தியுள்ளனர். விஞ்ஞான பிரிவு, வர்த்தக பிரிவு, கலைபிரிவு என மாணவர்கள் மத்தியில் தனியாக இப்போட்டிகள் நடத்தப்பட்டது. விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்திலும், சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
கலைபிரிவில் 8 பாடசாலைகளும், விஞ்ஞான மற்றும் வர்த்தக பிரிவில் தலா ஏழு பாடசாலைகளும் இப்போட்டியில் பங்கு கொண்டன. இறுதிப் போடடியும் பரிசளிப்பு நிகழ்வும் சிறிகோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (19.04.2008) காலை நடைபெற்றது.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
