சிறைத்தண்டனை
பெண் ஒருவரை பாலியல் ரீதியாக பஸ்சில் பயணம் செய்யும் போது துன்புறுத்தி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்களுக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்ட்ட 6 மாத சிறைத்தணடனையும் 2000.00 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனையில் நேற்று மாலை பிரயாணம் செய்த இளம் பெண் ஒருவரை பரிலயல் ரிதியாக துன்புறுத்திய அக்பர் முகமது ரஜீஸ், அலியார் முகமது பிலா ஆகியோருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.
நேற்று மாலை பஸ்சில் பணம் செய்தபோது கையடக்க தொலைபேசி மூலமாக படம் எடுக்க முனைந்ததாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு தான் உள்ளாகியதாகவும் வாழைச்சேனை பொலிசில் முறைப்பாடு ஒன்றினைச் செய்துள்ளார். இதனைத் தொடர் இவ்விரு இளைஞர்களும் கைது செய்ப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதமன்றில் இன்று (17.04.2008) வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த மாவட்ட நீதவான் செ.மாணிக்கவாசகர் இரு இளைஞர்களுக்கும் மேற்படி தண்டனையை விதித்தார்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
