சூரியன் வானொலி மீண்டும்
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிச் சேவைகள் இன்று (15.04.2008) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மீண்டும் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளது. இவர்களின் தமிழ் ஒலிபரப்பான சூரியன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 4 மாதங்களக்கு முன்னர் இச் சேவை முழுவதும் இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது.
இராஜினாமா
திருக்கோணமலை தொண்டர் நிறுவனங்களின் இணைய செயலாளர் திரு.ந.சிங்காரவேலு தனது செயலாளர் பதவியினை இன்று (15.04.2008) இராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமான கடிதம் ஒன்றினை தலைவர் து.தவசிலிங்கத்திற்கு முகவரியிட்டு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
மேலும் வாசிக்க »
