கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

புதுவருட சாரணர் முகாம்

2வது திருமலை சாரணர் குழுவின் (இ.கி.ச. சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) புதுவருட சாரணர் முகாம் வெள்ளிக்கிழமை (11.04.2008) நடைபெற்றது. சுpறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி உள்ளக மைதானத்தில் குழச்சாரணர் தலைவர் சி.சசிகுமார் தலைமையில் இம் முகாம் நடைபெற்றது.

லயன், ரொபின், பரட், ஈகிள், ஆகிய அணிகளைச் சேர்ந்த 30 சாரணர்களுடன், புதிதாக குழுவில் இணைந்து கொண்ட பத்து சாரணர்ளும் இதில் பங்கு பற்றினர்.

காலை 9.00 மணிக்கு சாரணர் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருக்கோணமலை விபுலாநந்தா கல்லூரியின் குழச்சாரணர் தலைவர். எஸ்.தேவசகாயம். புனித சூசையப்பர் கல்லூரி சாரணர் தலைவர் ச.சதீசன், புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலய சாரணர் தலைவர் இ.சக்தியராஜ் ஆகியோர் ஆரம்ப நிகழ்வுகளில் உதவி சாரணர் தலைவர் அ.சிவகுமாருடன் இணைந்து பங்கு பற்றினர்.

திருக்கோணமலை மகேஸ்வரி ஹாட்வெயார் நிறுவனத்தின் உரிமையாளர் அ.ஆருணன் இம் முகாமில் பங்கு கொள்ளும் சாரணர்களுக்கு அவர்களின் ஆவணங்களை பேணும் கோவைகளை வழங்குவதற்காக குழச்சாரணர் தலைவர் சி.சசிகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார்.

சாரணர்களின் கைத்திறன்கள், விiயாட்டு நிகழ்வுகள் என்பன சாரணர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகளாக நடத்தப்பட்டது. இதில் சாணர் தலைவர்களான எஸ்.தேவசகாயம், ச.சதீசன், க.சத்தியராஜ், பழையமாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் இ.அசோக், 2வது சாணர் குழுவின் பழைய சாணர்களான த.சிவதர்சன் (ஜனாதிபதி சாரணரன்) , வி.தேவவிதுரன், பு.சாயிபிரசாந்தன், யோ.தனுசாந்த், வி.விஜய், சி.லக்சனார்த்தன் ஆகிNயுhர் கலந்த கொண்டு முகாமினைச் சிறப்பித்தனர்.

மாலை 5.15 மணிக்கு இறுதி நிகழ்வாக பரிசுவழங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் திருக்கோணமலை மாவட்ட சாணர் சங்கத்தின் நிறைNவுற்றுக் குழுவின் தலைவர் திரு. நாயகம் சிற்றமம்பலம் அவர்கள் அதிதியாகக் கலந்து கொண்டார். நிறைவேற்றுக்குழுவின் உபதலைவர் ந.இரட்ணவடிவேல், கல்லூரியின் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பான பிரதி அதிபர் திருமதி. மே.ப.சண்முகநாதன், மற்றுமு; சாரணர் தலைர்கள், குருளைச் சாரணர் தலைவர்கள், ஆகியோருடன் சாணர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2007 ஆம் வருடம் க.பொ.த. சாதாரணம் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த து.கார்த்திகேயன், ரூ.ஜனோச், அ.சஜீபன், சி.சிவசாயிதரன் ஆகியோருக்கு அவர்கள் பெற்றுக் கொண்ட சித்தியை கௌரவிக்கும் முகமாக இடுப்பட்டி வழங்கி கௌரவிக்கப்பட்னர். அத்துடன் 2006,2007ஆம் வருடங்களில் சாரணர் குழவினை வழிநடத்திச் சென்று சாரணர்களின் உயர்வுக்கு சாணரமாக விளங்கிய சாரணரண் த.சிவதர்சனின் சேவையினைப் பாராட்டி பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

2008 ஆம் வருடம் பாடசாலையில் நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சைகளில் தரம் 4, தரம் 5, ஆகிய வகுப்புகளில் அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட குரளைச் சாரணர்கள் தலா மூன்று பெருக்கும், சாரணர் குழுவில் அதிக சராசரி புள்ளிiயைப் பெற்றுக் கொண்ட சாரணர்கள் மூவருக்கும் பாரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஏப்ரல் 12, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | , , , , , , | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்