கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

குருளைச்சாரணர் முகாம்

கௌரவ மாவட்ட ஆணையாளாட் ஜே.ஈ.ஆரோக்கியநாதர்      2வது திருமலை சாரணர் குழுவின் (ஸ்ரீ கோணேஸ்சரா இந்துக்கல்லூரி)     குருளைச்சாரணர்  முகாம் சனிக்கிழமை 05.06.2008 நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில்  காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இம் முகாம் மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்தது.

இதில் 46 குருளைச்சாரணர்கள் பங்கு கொண்டனர். குழுச்சாரணர் தலைவர் சி.சசிகுமார் அவர்கள் இம்முகாமினை ஒழுங்கு செய்திருந்தார்.குருளைச்சாரணர் தலைவர்களான (ஆக்கேலா) செல்வி. மீரா இராமச்சந்திரன், திருமதி சாந்தமேரி ஐவர்ஜென்னிங்ஸ், திருமதி சாந்தினிதேவி ரமணீகரன் ஆகியோர் குருளச்சாரணர்களை வழிநடத்தினர்.

முகாம் ஆரம்பத்தில் 4 குருளைச் சாரணர்களுக்கு அங்கத்துவ சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

குருளைச்சாரணர்களின் இம் முகாமிற்கு சாரணர்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். இதில் 19 சாரணர்கள் முழுமையாக கலந்து கொண்டு தமது சேவைகளை வழங்கி வைத்தனர்.

சாரணர்கள் மத்தியில் அறிவுத்திறனை வளர்க்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

 

மாலை 4.30 மணிக்கு பெற்றோர்கள் முகாமிற்கு அழைக்கப்பட்டனர் மாலை 5.00 மணிக்கு பெற்றோர் சாரணர் ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. இதில் கல்லூரி அதிபர் மா.இராசரெத்தினம், முன்னாள் திருக்கோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளரும், தற்கோதய கௌரவ ஆணையாளருமான ஜே.ஈ.ஆரோக்கியநாதன், திருக்கோணமலை மாவட்ட உதவி மாவட்ட ஆணையாளர் (நிர்வாகம) செ.பத்மசீலன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சாரணர் துருப்பசை; சேர்ந்த நா.கிருஷிகேசன், க.புதுர்சன், வி.விஜயபிரகாஷ், சி.யுதீஸ்வரன், சி.பிறேம்சாந் ஆகியோருக்கு மாவட்ட சாரணர் ஆணையாளர் விருது வழங்கி வைக்கப்பட்டது. இவற்றை முறையே ஜே.ஈ.ஆரோக்கியநாதன், செ.பத்மசீலன் ஆகியோர் அணிவித்தனர்.

பத்திரகாளி அம்பாள் ஆலய உற்சவத்தின் போது அதிகமணி நேரம் சேவையாற்றிய 5 சாணர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதிபர் மா.இராசரெத்தினம் அவர்கள் இவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தார்.

குருளைச்சாரணர்கள் காட்டிய திறமையின் அடிப்படையில் அவர்களுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது. கல்லூரியின் விளையாட்டு பொறுப்பாசியரியர் அ.பசீர்அமீர், புனித ஜோன் படையணி பொறுப்பாசிரியர் சாம்.பாஸ்கரன், ஆரம்ப பிரிவு இணைப்பாளர் செல்வி வி.சிவபுண்ணியம் ஆகியோர் இவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தனர்.

 

2nd Trinco Scout Group cub day was held at R.k.M.Sri Koneswara Hindu College grounds at 06.04.2008 sunday. 46 cubs were participate this event. Group scout leader S.Sasikumar was organized this event. Arkelas Ms.Meera Ramachandran,Mrs.Shanthini Ramanikaran,Mrs.Santhamery iwer jennings were participated.

Fomer Trincomalee District scout Commisioner Mr.J.E.Arokiyanathar and ADC admin Mr.S.Pathmaseelan were participate the closeing ceremony.

ஏப்ரல் 7, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | , , , | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்