கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சர்வதேச மத தலைவர்கள் மாநாடு

இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் சர்வதேச மத தலைவர்கள் மாநாடு ஒன்று திருக்கோணமலை நடத்தப்பட்டது. புதன்கிழமை (30.04.2008) காலை 9.30 மணிக்கு இம் மாநாடு அலஸ்தோட்டம் கிளப் ஓசியானிக் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

ஏப்ரல் 30, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

மூக்கு கண்ணாடி விநியோகம்.

                இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை (27.04.2008) காலை 10.30 மணிக்கு திருக்கோணமலை  சௌபாக்கியா மண்டபத்தில் வைத்து இக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

ஏப்ரல் 29, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , | No Comments Yet

வாழ்வாதார உதவிகள்

சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பின் திருக்கோணமலை அலுவலகத்தினால் இந்தியாவில் இருந்து திரும்பியவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 2006 ஆண்டு காலப்பகுதியில் இருந்து தாயகத்திற்கு   திரும்பியவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றது.  ஆயிரம் பேருக்கு இவ்வாறு சுயதொழில் புரிவதற்கு  உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் வாசிக்க »

ஏப்ரல் 23, 2008 பதிந்தவர் tconews | ஐஓஎம் (IOM), செய்திகள் | , , | No Comments Yet

வினாவிடைப்போட்டி

திருக்கோணமலை  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  பாடசாலை மாணவர்கள் மததியில் பொது அறிவு வினாடி விடைப் போட்டி ஒன்றினை நடத்தியுள்ளனர். விஞ்ஞான பிரிவு, வர்த்தக பிரிவு, கலைபிரிவு என மாணவர்கள் மத்தியில் தனியாக இப்போட்டிகள் நடத்தப்பட்டது. விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்திலும், சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் வாசிக்க »

ஏப்ரல் 21, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சிறைத்தண்டனை

பெண் ஒருவரை பாலியல் ரீதியாக பஸ்சில் பயணம் செய்யும் போது துன்புறுத்தி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்களுக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்ட்ட 6 மாத சிறைத்தணடனையும் 2000.00 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க »

ஏப்ரல் 17, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , | No Comments Yet

சூரியன் வானொலி மீண்டும்

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிச் சேவைகள் இன்று (15.04.2008) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மீண்டும் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளது. இவர்களின் தமிழ் ஒலிபரப்பான சூரியன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 4 மாதங்களக்கு முன்னர் இச் சேவை முழுவதும் இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது.

ஏப்ரல் 15, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , | No Comments Yet

இராஜினாமா

திருக்கோணமலை  தொண்டர் நிறுவனங்களின் இணைய செயலாளர் திரு.ந.சிங்காரவேலு தனது செயலாளர் பதவியினை இன்று (15.04.2008) இராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமான கடிதம் ஒன்றினை தலைவர் து.தவசிலிங்கத்திற்கு முகவரியிட்டு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
மேலும் வாசிக்க »

ஏப்ரல் 15, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , , | No Comments Yet

புதுவருடம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள். எதிர்காலம் சிறப்பானதாக அமையட்டும்.

 

ஏப்ரல் 12, 2008 பதிந்தவர் tconews | வாழ்த்து | | No Comments Yet

புதுவருட சாரணர் முகாம்

2வது திருமலை சாரணர் குழுவின் (இ.கி.ச. சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) புதுவருட சாரணர் முகாம் வெள்ளிக்கிழமை (11.04.2008) நடைபெற்றது. சுpறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி உள்ளக மைதானத்தில் குழச்சாரணர் தலைவர் சி.சசிகுமார் தலைமையில் இம் முகாம் நடைபெற்றது.

மேலும் வாசிக்க »

ஏப்ரல் 12, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , , , , , | No Comments Yet

அடிக்கல்நாட்டப்பட்டது.

         திருக்கோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி புதிதாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணியில் ஆரம்ப பிரிவுக்கான அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு திங்கட்கிழமை (07.04.2008) மதியம் 12.00 மணிக்கு நடைபெற்றது.

மேலும் வாசிக்க »

ஏப்ரல் 7, 2008 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | No Comments Yet