பாலர் விளையாட்டு விழா
திருக்கோணமலை கலைமகள் மொண்டிசூரி பாடசாலையின் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (30.03.2008) மதியம் 2.00 மணிக்கு மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்றது.
திருமதி சா.ஆனந்தராஜா அவர்களின் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. திருக்கோணமலை கோட்டக்கல்வி அதிகாரி க.அரியநாயகம் பிரதம விருந்தினராகவும், மெதடிஸ்த பெண்கள் கல்லூரி ஆரம்பபிரிவு பகுதித் தலைவர் திருமதி சி.வில்வநாதன் கௌரவ விருந்தினராகவும், யுனிசெப் நிறுவனத்தின் சுகாதார சத்துணவு உத்தியோகத்தர் திரு.ந.சுதர்மன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிதிகள் மைதான வாயிலில் இருந்து பாண்டு வாத்தியம் சகிதம் வரவேற்று அழைத்து வரப்பட்டனர்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
