வீடுகள் கையளிப்பு
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ நிறுவனம் கொட் எயிட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்தர விடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.
சனசமூக நிலையம்
dscf4081.jpg dscf4075.jpgதிருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் புனித செபஸ்தியார் ஆலய வளவில் 17 இலட்சம் ரூபாய்கள் செலவில் சனசமூக நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது.
எகெட் கரித்தாஸ் பொங்கல் விழா
![]()
![]()
![]()
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் தேசிய சமாதான பிரிவு பொங்கல் விழாவினை வெள்ளிக்கிழமை 25.01.2008 நடத்தியது.
மேலும் வாசிக்க »
பல்கலைக்கழக மாணவர்கள் மறியல் போராட்டம்
கிழக்கு பல்கலைக்களகத்தின் திருக்கோணமலை வளாகத்தை கோணேசபுரி என்னும் இடத்திற்கு இடமாற்றுவதை கண்டித்த பல்கலைக்கழக மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலுதவி பயிற்சி
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
துப்பரவு பணியில் இராணுவம்
திருவள்ளுவர் சிலை அமைந்த பகுதி இலங்கை இராணுவத்தினரால் சுத்திகரிக்க்கப்படுகின்றது. இலங்கையின் 60வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திருக்கோணமலை நகரினை நகரினை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மாலைநேர வகுப்பு
திருக்கோணமலை திருக்கடலூர் பகுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி மாலை நேர வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கடலூர் மீனவர் சங்கத்தில் இந்த வகுப்புக்கள் நடத்தப்படுகின்றது. கடந்த தைப்பூசத்தின் போது 22.01.2008 இவ்வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நூலகம் சஞ்சிகை வெளியீடு
திருக்கோணமலை நகர சபை மண்டபத்தில் 22.01.2008 மாலை 3.00 மணிக்கு நூலகம் என்னும் சஞ்சிகை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. மாதம் இரண்டு மறை வெளிவரத்தக்கதாக அச் சஞ்சிகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக ந.செல்வஜோதி செயற்படுகின்றார்.
நூலகம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதற்கு கதிரவன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
மாணவர் வரவேற்பு
திருக்கோணமலை சிறி சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இவ்வருடம் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை 21.01.20008 காலை 8.00 மணிக்கு நடைபெற்றது.
பொங்கல் விழா
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சமாதான பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 25.01.2008 அனுஸ்டிக்கப்படுகின்றது.
