கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

பெண்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் கோப்பி

பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் வயது முதிர்வடையும்போது, நினைவாற்றல் திறன் குறைவது இயல்பு.

ஆனால், வயதான பெண்களுக்கான நினைவாற்றல் திறன் நீடித்திருப் பதற்கு. கோப்பி  உறுதுணைபுரிகிறது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் மருத்துவ ஆய்வு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், நாளொன்றுக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட டம்ளர்கள் கோப்பி அருந்தும் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் நினைவாற்றல், ஒரு டம்ளர் அல்லது அதற்கும் குறைவாக கோப்பி அருந்தும் பெண்களுக்கு இருப்பதைக் காட்டிலும் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், வயதான பெண்களுக்கு நினைவாற்றல் திறன் மேலும் சில ஆண்டுகள் நீடிப்பதற்கு, காபி துணைபுரிகிறது என்கின்றது அந்த மருத்துவ ஆய்வு.

அதேநேரத்தில், மிக அதிக அளவில் கோப்பி அருந்துவதை தவிர்த்து, குறிப்பிட்ட அளவு மட்டும் அருந்தும்படி பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே, நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு டம்ளர் காபியை மட்டும் அருந்தி, வயதான பெண்கள் தங்களது நினைவாற்றல் திறனை நீடிக்கச் செய்யலாம்.

அக்டோபர் 26, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்