இருதயக் கோளாறை தவிர்க்க உதவும் தானிய உணவுகள்
அன்றாடம் காலை உணவில் தானிய வகைகளைச் சேர்த்துக் கொண்டால், இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை வெகுவாகத் தவிர்க்கலாம் என்கிறது மருத்துவ ஆய்வு.
இதுதொடர்பான ஆய்வின் முடிவை, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச் சியாளர் ஜோவுஸ்ஸே என்பவரது தலைமையிலான ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்டுள்ளது.
கடந்த 18 ஆண்டுகளில் 21,400 ஆண் டாக்டர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், தானிய வகை உணவுப் பொருட்களுக்கு, இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புக்களை வெகுவாக தவிர்க்கும் வல்லமை உண்டு என்பது தெரிய வந்துள்ளது.
“காலை உணவில் குறைந்தபட்சமாக 4 கிராம் அளவிலான நார்ப் பொருள் தேவைப்படுகிறது. இதற்கு, தானிய வகை உணவுகள் உறுதுணைபுரிகின்றன” என்றார் ஆராய்ச்சியாளர் ஜோவுஸ்ஸே.
இவ்வாறு வாரத்துக்கு 2 முதல் 6 நாட்கள் வரை காலையில் தானிய உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு, 21 சதவிகித அளவிலும், வாரத்துக்கு 7 நாட்கள் உட்கொள்வோருக்கு 29 சதவிகித அளவிலும் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் எற்படுவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
அதேநேரத்தில் இந்த ஆய்வு, ஆண்களிடம் மட்டுமே கொண்டு மேற் கொள்ளப்பட்டதால், இது பெண்களுக்குப் பொருந்தாது என்கின்றனர், ஆய்வாளர்கள்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
