கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

கிழக்கு மாகாண அரச சேவைகளில் 2631 பதவிகளுக்கான வெற்றிடங்கள்

கிழக்கு மாகாண அரச சேவையில் 2, 631 பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன. அகில இலங்கை சேவை வெற்றிடங்கள் -194, சுப்ரா தரத்திலான முகாமைத்துவ உதவி யாளர்கள் 45, முகாமைத்துவ உதவியாளர்கள் 276, அதிபர்கள் 422, ஆசிரியர்கள் 1,694 என்பனவே நிரப்பப்படாமலுள்ள வெற்றிடங்களாகும்.

இதனால், மாகாண நிர்வாகத்தை சிறப்பாகச் செய்வதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பதவி நிலை தரத்திலான அகில இலங்கை சேவையாளர்கள் இன்மை சில தேக்க நிலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அகில இலங்கை சேவையாளர்கள் வெற்றிட விபரம் வருமாறு இலங்கை நிர்வாக சேவை-36, இலங்கை திட்டமிடல் சேவை 20, இலங்கை கல்வி நிர்வாக சேவை 75, இலங்கை வரி மதிப்பீட்டார் சேவை 11, இலங்கை கணக்காளர் சேவை 27, இலங்கைப் பொறியியல் சேவை 17, இலங்கை விலங்கு உற்பத்தி சுகாதார சேவை 17, இலங்கை விவசாய சேவை 09.

அக்டோபர் 24, 2007 - பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்