திருக்கோணமலையை கண் வைத்து காய் நகர்த்தும் இந்தியா
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயம் இந்திய அரசின் இலங்கைக்கான ஆயுத உதவியும் தமிழின உணர் வாளர்கள் மத்தியில் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத் தியுள்ளது. இந் நிலையில் ஆயுத உதவிக்கு பிரதியீடாக திருகோண மலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி வழங்கி நன்றிக்கடன் தீர்த்துள்ளது இலங்கை அரசாங்கம்.
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை.
கிழக்கு மாகாணத்தை அரச படைகள் கைப்பற்றி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அங்கு பாதுகாப்பு உத்தராவதம் கிடையாது என அமெரிக்க இராஜாங்க செலயகம் அறிவித்துள்ளது.
