கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

தொப்பைக்கு ‘குட் பை’

சிலருக்கு இளம் வயதிலேயே தொப்பை விழுந்து, பார்ப்பதற்கு வயதானவர் போல் தோன்றுவர். தொப்பைக்கு ‘குட் பை’ சொல்ல இதோ ஓரு சூப்பர் வழி.

முதலில் மருத்துவரிடம் சென்று ‘இயக்குநீர்’ குறைபாடு உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த குறைபாடு இருந்தால் முறைப்படி மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளவும்.

இந்த குறைபாடு இல்லாவிட்டால், சில உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். நெய், வெண்ணெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருட்களை ஒதுக்க வேண்டும்.

மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அல்வா, பால்கோவா, ஐஸ்கிரீம் போன்றவற்றை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.

வாக்கிங், ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற சிறு சிறு உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்துவந்தால், தொப்பை விரைவில் எஸ்கேப் ஆகிவிடும்.
 

அக்டோபர் 10, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்