கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

இளம் விவசாயி தம்பலகாமத்தில் கடத்தப்படார்.

திருக்கோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத ஆயுததாரிகளால் இளம் விவசாயி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். திங்கட்கிழமை 08.10.2007 புதுக்குடியிருப்பு என்னும் பகுதியில் அமைந்துள்ள சிவலிங்கம்  சுரேந்திரன் என்வரது வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய ஐவர் இவரை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளனர்

இச்சம்பவம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தம்பல காமம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் புகார் செய்யப் பட்டுடுள்ளது.  33 வயதுடைய சிவலிங்கம் சுரேந்திரன்  மூன்று பிள்ளை களின் தந்தையாவார்.

அண்மைக் காலமாக தம்பலகாமம் பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய வர்கள் வெள்ளைவானில் வந்து மக்களை அச்சமூட்டுவதாக தெரிவிக் கப்படுகின்றது.

அக்டோபர் 9, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

காணமல் போனோரின் குடும்பங்களைச் சந்திக்கிறார் லூய்ஸ் ஆர்பர்

இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி  இராணுவம் மற்றும் அதனு டன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் குடும்பங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் சந்திக்க உள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்ப்பு குறித்து வருத்தமடைந்துள்ள கொழும்பு ஐ.நா. அலுவலகம்இ அதனையும் மீறி இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.  கொழும்பில் எதிர்வரும் வியாழக்கிழமை 11.10.2007 பிற்பகல் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து  பொதுமக்களை சந்தித்துப் லூய்ஸ் ஆர்பர்  பேச உள்ளார்.

அக்டோபர் 9, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

வீடுகளைக் கட்ட இராணுவம் தடை

மட்டக்களப்பு ஆலங்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடு களைக்  கட்ட   இராணுவம் தடை விதித்துள்ளமைக்கு  தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின்  மட்டக்களப்பு   நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி  கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

மேலும் வாசிக்க »

அக்டோபர் 9, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை