கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

கந்தையா ரீச்சர் காலமானார்

இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி கந்தையா இராசநாயகி அவர்கள் 04.10.2007 அன்று காலமானார்.  இவருக்கு கதிரவன் தனது அஞ்சலிகளை முன்வைக்கின்றது.
திருக்கோணமலையில் காந்தீய வழியில் சமூக, சமய தொண்டாற்றிவரும் காந்தி மாஸ்ரர் என அழைக்கப்படும் கந்தையா ஆசிரியரின் பாரியாராவார். இந்துக்கல்லூரியில் கற்பித்த காலங்களில் பல மாணவர்களின் முன்னேற்றங்களுக்கு காலாக அமைந்திருந்தார்.
அன்னாரின் இறுதி சடங்குகள் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் முன்னால் உள்ள அன்னாரது இல்லத்தில்  05.10.2007 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்று திருக்கோணமல இந்த மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அக்டோபர் 5, 2007 - பதிந்தவர் tconews | அஞ்சலி | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்