சுகாதாரம் பேணுவோம்; குடல்வால் நோயைத் தகர்ப்போம்!
அப்பெண்டிசைடிஸ் என்றழைக்கப்படும் குடல்வால் நோய் குறித்து அனைவரும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
காரணம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எப்போது வேண்டுமானாலும் இந்நோய் வருவதற்கான சாத்தியம் உண்டு.
இந்நோய் குறித்த விவரம் அறியாததால், பலரும் பல்வேறு விதமான அனுமானங்களைக் கொண்டிருப்பர். ஆதாலால், ‘வயிறு வலிக்கிறதே’ என்று தற்காலிக வைத்தியம் மட்டும் மேற்கொண்டுவிடுவர். இதனால், எவ்வித பலனும் இல்லை என்பதை உணர வேண்டும்.
குடல்வாலில் பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் உண்டாவதாலும், குடல் புழுக்களின் பாதிப்புகள் காரணமாகவும் இந்நோய் உண்டாகிறது.
அத்துடன், தொடர்ச்சியாக மலச்சிக்கல் ஏற்படுவதும், குடல்வால் சுறுங்குதல் மற்றும் அவ்வப்போது மலமிளக்கி மாத்திரைகளை உபயோகிப்பது போன்வையும் இந்நோய்க்குக் காரணமாக அமைகிறது.
சுகாதாரம் பேணுவதும், மலச்சிக்கல் வராமல் முன்னெச்சரிக்கையாக செயல்படுவதும், இரவில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும், நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுவதுமே இந்நோய் வராமல் தடுக்கும் வழிகளாகும்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
