கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சீனா பயணம்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் இன்று (17.09.2007)இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின்போதுஇ இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து சீன அதிகாரிகளுடன் சிவ் சங்கர் மேனன் விவாதிப்பார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன அதிகாரிகளுடனான சந்திப்பில்இ இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அத்துடன்இ இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாகவும் மேனன் விவாதிப்பார் என தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ இம்மாத இறுதியிலும்இ பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஆண்டு இறுதியிலும் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதில்இ மன்மோகன் சிங்கின் பயணத்தின்போதுஇ இருநாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.

Siv Sankarmenan China visit

செப்டம்பர் 17, 2007 - பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்