இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா 3 நிபந்தனைகள் முன்வைப்பு
அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை மேலும் நீடிக்கப்போவதில்லை என அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இதற்காக மூன்று நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்pற்கு அது விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்pல் உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமை கண்காணிப்பாளர்களை நியமிப்பதுடன்இ இலங்கையில் இடம்பெற்று வரும் நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை நீதிக்கு முன்பாக சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் உறுதிப்படுத்தும் வரை சிறிலங்காவிற்கான படைத்துறை உதவிகளை நீடிப்பதனை அமெரிக்கா நிறுத்த முடிவெடுத்துள்ளது.
2008 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின் வரைபில் உள்ள 690 ஆவது பிரிவின் பிரகாரம் இந்த தீர்மானம் கடந்த வாரம் அமெரிக்காவின் செனட் சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செனட்டின் தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ள போதும்இ நாடாளுமன்றத்தில் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
எனினும் 690 ஆவது சரத்து தொடர்பான வேறுபாடுகளுக்கு செனட் மற்றும் நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்வு காணப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் பங்குபற்றும் ஏழு உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையின் குழுவிற்கு செனற்றர் லியகி தலைமை வகிப்பதுடன்இ நாடாளுமன்ற குழுவிற்கு நாடாளுமன்றத்தின் வெளிவிவகார உப குழுவின் தலைவரான நீற்றா லோவ்வி மற்றும் பிராங் வுல்ப் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
அமெரிக்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் பிரகாரம் சிறிலங்காவிற்கான பாதுகாப்பு ஏற்றுமதி அனுமதிகள்இ இராணுவ உபகரணங்கள்இ தொழில்நுட்பங்கள் என்பன மேற்கொள்ளப்பட முடியாது.
எனினும் இதற்கான நிபந்தனையாக இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள்இ சிறார் படைச் சேர்ப்பில் படையினரின் தொடர்புகள்இ நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றிற்கு காரணமானவர்களை நீதிக்கு முன்நிறுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனட் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட 690 ஆவது பிரிவின் முழு விபரம் வருமாறு:
பாதுகாப்பு ஏற்றுமதிகளுக்கான அனுமதிஇ இராணுவ உபகரணங்கள்இ படைத்துறை தொழில்நுட்பங்கள் போன்ற வெளிநாட்டிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகள் சிறிலங்காவிற்கு பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் நிறுத்தப்பட உள்ளன.
இதற்குரிய நிபந்தனைகளாக பின்வரும் மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன்இ அதனை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் உறுதிப்படுத்தவும் வேண்டும்.
1. மனித உரிமை மீறல்கள்இ நீதிக்கு புறம்பான படுகொலைகள்இ சிறார் படைச் சேர்ப்புக்களை படையினர் நிறுத்த வேண்டும்இ அதற்கு காரணமானவர்களை சிறிலங்கா அரசாங்கம் நீதிக்கு முன்நிறுத்த வேண்டும்.
2. இலங்கையின் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு மனிதாபிமான உதவி நிறுவனப் பணியாளர்கள்இ ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும்.
3. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் களநிலை அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
