“இலங்கையில் மற்றொரு பாரிய பூமியதிர்வு ஏற்படும்”
இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு பாரிய பூமியதிர்வு விரைவில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக புவியியல் ஆய்வக அலுவலக பணிப்பாளர் கலாநிதி ஓ.கே. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த 12 ஆம் நாள் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் பல பூமியதிர்வுகள் நிகழ்ந்துள்ளன. அதன் பதில் தாக்கமாக விரைவில் பெரும் தாக்கத்துடன் பூமியதிர்வு ஏற்படலாம்.
கடந்த வாரம் நிகழ்ந்த பூமியதிர்வு கடலில் 30 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாலேயே அயல் நாடுகளில் அதன் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அது நிகழ்ந்திருப்பின் 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையைப் போன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம்.
முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலை நிலை போன்று மீண்டும் ஏற்படாது என்ற நிலையில் இருக்க முடியாது. மக்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்றார் அவர்.
Earth quak in future
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
