கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

பழ.நெடுமாறன் அவர்களின் போராட்டம் தொடர்கிறது

தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்களை உண்ணாநிலை போராட்டத்தை கைவிடகோரி எழுதிய கடித்திற்கு பதில்கடிதம் எழுதிய அய்யா அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை கைவிடமறுத்துள்ளதாக தெரியவருகிறது.

அவர்களது கடிதம் வருமாறு

முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன். என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும்இ நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

தாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவண செய்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது.

எனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள

பழ.நெடுமாறன்.

செப்டம்பர் 15, 2007 - பதிந்தவர் tconews | Uncategorized | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்