கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

நெடுமாறனின் காலவரையறையற்ற தியாக உண்ணாவிரத போராட்டம்இ இலக்கு நிறைவேறிய நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு முடிவுக்கு வந்தது.

பழ.நெடுமாறன் அவர்களை இன்று பிற்பகல் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ் இதற்கான உறுதிமொழியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பழநெடுமாறனின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ராமதாஸ் அவர்கள் இன்று தமிழக முதல்வருடன் தொலைபேசியில் நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பhக உரையாடிபோது யாழ் குடாநாட்டிற்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வைப்பதில் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி அவர்களும் உறுதியாக இருப்பதாக உறுதியளித்துள்ளதையடுத்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பழ.நெடுமாறன் அவர்கள் இன்று நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

நெடுமாறன் அவர்கள் நாகைபட்டினத்தில் ஒரு நாளும் சென்னை கொயம்பேட்டில்  மூன்று தினமுமாக நான்கு நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளார்.

நெடுமாறன் அவர்களின் நாடித்துடிப்பு குறைந்து செல்வதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கருனாநிதி அவர்களின் வழங்கிய உறுதிமொழியைத் தெரிவித்து உங்கள் உண்ணா விரத போராட்டத்தை உடன் நிறுத்துங்கள் இல்லையேல் நாம் உங்களை இழந்துவிடுவோம் எனக் கூறியுள்ளார். 

இருந்தும் நெடுமாறன் அவர்கள் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ், வை.கோ, பாவலர் அறிவுமதி, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் சீமான் உட்பட பல ஈழத்தமிழர; ஆதரவாளர்கள் தொடர்ந்து உண்ணாவிரத  போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உண்ணாநிலைப் போராட்டத்தை நெடுமாறன் அவர்கள் இன்று  முடிவுக்குள் கொண்டுவந்துள்ளார்.

நே;று வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் பத்திரகை அறிக்கை ஒன்றின் மூலமாக பழ நெடுமாறனை இப்போராட்டத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.

பழ நெடுமாறன் அவர்கள்மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம்  மூலமாக தமிழகம் மீண்டும் இழத்தமிழர் சார்பாக எழுச்சி கண்டுள்ளதாக  திருக்கோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வே.இரத்தினசிங்கம் பழ நெடுமாறன் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதில், சிறிலங்கா இராணுவ முற்றிகைக்குள்ளாகி பசியாலும் பட்டினியாலும் நோயாலும் அவலப்படும் யாழ். குடாநாட்டின் தமிழ் உறவுகளுக்கு ஓடிவந்து உதவத்துடிக்கும் தங்களது உணர்வுகளையும்இ தமிழக உறவுகளின் உணர்வலைகளையும் கண்டு பெருமைகொள்கிறது தமிழீழ தேசம்.

யாழ். குடாநாட்டின் பாதைகளை இறுக மூடி பல இலட்சம் மக்களுக்கான உணவுஇ மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்து அம்மக்களினை பட்டினிச் சாவிற்குள்ளாக்கி தனது இராணுவ மேலாதிக்கத்தை நிறுவ முற்படுகிறது சிறிலங்கா.

சிறிலங்கா அரசின் இரக்கமற்ற இனவாதக் கொடூரத்திற்கு ஆளாகி துயரப்பட்ட மக்களின் துயர்துடைக்க தமிழக உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவுஇ மற்றும் மருந்துப்பொருட்களை செஞ்சிலுவைச்சங்கத்தின் மூலம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு கொடுத்துதவ எடுத்த முயற்சிகளெல்லாம் பலனற்றுப்போனதால் உயிராபத்தையும் பொருட்படுத்தாது படகுகள் மூலம் நேரடியாகக் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டீர்கள். இந்திய அரசு தடுத்த நிலையில் சாகும் வரை உண்ணா நோன்பை தொடங்கினீர்கள்.

இச்செய்தியைக் கேட்டபோது இருபது ஆண்டுகளுக்குமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன்இ மக்களின் இயல்பு வாழ்வுக்கான ஜந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து இந்திய அரசின் பாராமுகத்தினால் தியாகச் சாவைத் தழுவிக்கொண்டமைதான் நினைவுக்கு வந்தது.

திலீபனின் நினைவு நாளிலே யாழ். குடாநாட்டு மக்களின் பசி அடங்கவேண்டும் என்பதற்காக உணவைக் கொண்டுவர அதே இந்திய அரசு தடுத்தபோது நீங்கள் உங்கள் வயிற்றில் பசியை வளர்க்கத் தொடங்கினீர்.

இந்த வேள்வித் தீ தமிழகத்தின் நெஞ்சங்களிலெல்லாம் கொழுந்து விட்டெரியத் தொடங்கிவிட்டது என்ற செய்தியை அறியும்போது நீண்ட காலமாக சிங்களத்தின் இனவாத நெருப்புக்குள் நின்று போராடும் எங்களுக்கு இச்செய்தி புதிய உட்வேகத்தை ஊட்டி நிற்கிறது.

நாங்கள் தனித்து விடப்பட்ட இனமல்ல. எங்களுக்கு பக்க பலமாக தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் கட்சி பேதங்களை மறந்து தமிழன் என்ற ஒரே உறவுணர்வுடன் எழுச்சிகொண்டிருப்பது கண்டு நிறைவடைகிறோம்.

உங்கள் உணர்வுகளுடன் எங்கள் இலட்சியப்பயணத்தை நாங்கள் தொடர்கிறோம்.

வேரும் விழுதுமாக நின்று விடுதலையை வென்றெடுப்போம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paza Nedumaran fasting over.

செப்டம்பர் 15, 2007 - பதிந்தவர் tconews | Uncategorized | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்