கிளாலியில் படையினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு
கிளாலிப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று பாரிய அளவில் பலமுனைத் தாக்குதல்களை நடத்தியவாறு மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முடியடித்துள்ளனர்.செறிவான ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த பாரிய முன்நகர்வு முயற்சியினை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர்.
Kilali frontline attack
இம் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6.30 மணிவரை கடும் எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
சுமார் 1.30 மணிவரை நடைபெற்ற எதிர்த்தாக்குதலின் பின்னர் சிறிலங்காப் படையினர் பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
