உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கருணாநிதி வேண்டுகோள்
இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்களை ஆனப்பி வைக்க பழ நெடுமாறன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவரின்போராட்டத்தை நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி பழ நெடுமாறனை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் வருமாறு…
பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணா நோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.
ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
மு. கருணாநிதி.
முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பழ. நெடுமாறன், இது குறித்து நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நாளை காலை போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி என் முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
