யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்க பழநெடுமாறன் முயற்சி
இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்லும் வாகனத்தை, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் இன்று சனிக்கிழமை 08.09.2007 கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
திருகோணமலையில் சாரணர் முகாம்.
திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் மாவட்ட ஒன்றுகூடல் இன்று 08.09.2007 சனிக்கிழமை ஆரம்பமானது. புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் 3 தினங்கள் நடைபெறும் இச் சாரணர்முகாமில் 245 சாரணர்கள் பங்கு கொள்கின்றனர்.
மேலும் வாசிக்க »
திருகோணமலையில் சாரணர் முகாம்.
திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் மாவட்ட ஒன்றுகூடல் இன்று 08.09.2007 சனிக்கிழமை ஆரம்பமானது.
புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் 3 தினங்கள் நடைபெறும் இச் சாரணர்முகாமில் 245 சாரணர்கள் பங்கு கொள்கின்றனர்.
புனித சூசையப்பர் கல்லூரி, இ.கி.ச. சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, உவர்மலை விவேகாநந்தா கல்லூரி, பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயம், சிவாநந்தா தபோதவனம், நாமகள் வித்தியாலயம். விபுலாநந்தா கல்லூரி, புனித வளனார் தமிழ் வித்தியாலயம், சிங்கள மத்திய மகா வித்தியாலயம், போன்ற சாரணர் குழுக்கள் இதில் பங்கு கொள்கின்றன.
திருக்கோணாணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் இ.இராஜரஞ்சனின் வழிகாட்டலில் இம் முகாம் நடைபெறுகின்றது.இதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை மாவட்ட சாரணர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தலைவர் நாயகம் சிற்றம்பலம் , செயலாளர் செபஸ்தியன், பொருளாளர் ஜே.இ.தம்பிப்பிள்ளை போன்றேர் வழங்கி வருகின்றனர்.
