கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

திருகோணமலையில் வர்த்தகர் உட்பட இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புறநகர் பகுதியான உப்புவெளியில் வைத்து இரண்டு தமிழர்கள் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 7, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | இதுவரை மறுமொழிகள் இல்லை

மூதூர் வலயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

மூதூர் வலயத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அனுபவிக்கும் அசௌகரியங்கள், சிரமங்கள் தொடர்பாக அடிக்கடி செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைகள் கிடைக்காமை, ஓய்வூதியம் கிடைக்காமை, நிர்வாக நிதி விடயங்களில் அதிருப்தி, முறையற்ற இடமாற்றங்கள் போன்ற செய்திகள் வெளிவருகின்றன.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 7, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | இதுவரை மறுமொழிகள் இல்லை

புதிய சிங்கள மாவட்டத்தை உருவாக்க முயற்சிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் புதியதொரு சிங்கள மாவட்டமொன்றை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லையென தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 7, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | இதுவரை மறுமொழிகள் இல்லை

ஈச்சிலம்பற்றில் 290 குடும்பங்கள் மீளக் குடியேறின

படைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வசித்துவந்த 290 குடும்பங்களைச் சேர்ந்த 1150 பேர் இன்று ஈச்சிலம்பற்றில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.சிறீலங்கா காவல்துறையின் ஆயுதம் தரித்த காவலுடன் வாகரை ஊடாகப் பேரூந்துகளில் இவர்கள் அனைவரும் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 7, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | இதுவரை மறுமொழிகள் இல்லை

இலங்கை உள்நாட்டுப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வு: யேர்மனிய 3 SAT , ZDF தொலைக்காட்சிகள்

வியாழக்கிழமை இரவு 9மணிக்கு  ஒளிபரப்பாகிய 3 SAT , ZDF தொலைக்காட்சிகளில் சிறிலங்காவின் உள்நாட்டுப்போர் எனும் தலைப்பில் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.இதில் தென்தமிழீழத்தில் நடைபெறும் மனித அவலம் மற்றும் தமிழினப் படுகொலைகளை அரசபடைகளே மேற்கொண்டு வருகின்றது என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்கு மூலத்துடன் ஒளிபரப்பாகியிருந்தது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 7, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | இதுவரை மறுமொழிகள் இல்லை

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தை சிறிலங்காவுக்கு எதிராக பயன்படுத்தவும்: அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு

சிறிலங்காவில் மிக வேகமாக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் ஆறாவது கூட்டத்தொடரை பயன்படுத்துமாறு அதன் உறுப்பு நாடுகளுக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04.09.07) அனைத்துலக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை:

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 7, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | இதுவரை மறுமொழிகள் இல்லை