பரிசளிப்பு விழா
திருக்கோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் , மலர் வெளியீடும் சனிக்கிழமை (11.07.2009) காலை 9.00 மணிக்கு கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெறுகின்றது. மேலும் வாசிக்க »
நடைபாதை வியாபாரம் அகற்றப்பட்டது.
திருக்கோணமலை நகரில் வீதியோரங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த விற்பனை நிலையங்கள் நகர சபை நிர்வாகத்தினால் வியாழக்கிழமை (09.07.2009) காலை தொடக்கம் அகற்றப்பட்டது. மேலும் வாசிக்க »
பிரிவுபசார விழா
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர் பிரிவுபசார விழா வியாழக்கிழமை 09.07.209 மாலை நடைபெற்றது. கல்லூரி உள்ளக மைதானத்தில் இவ்விழா நடைபெற்றது. மேலும் வாசிக்க »
பல்தேவைக்கட்டிடம்
வட கிழக்கு கரையோர அபிவிருத்திதிட்டம் மூலம் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் திருக்கோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்லடி கிராமத்தில் பல்தேவைக்கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் வைபவ ரீதியாக தேச நிர்மாண அமைச்சர் புஞ்சிநிலம அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மாரடைப்பைத் தவிர்க்கும் இஞ்சி.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வணிக கல்வி வெளியீடு
திருக்கேர்ணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முன்னாள வணிக ஆசிரியர் எல்.பி.ஞானபிரகாசம் எழுதிய கணக்கீடு என்னும் புத்தக வெளியீடு செவ்வாய்கிழமை 07.07.2009 காலை 11.00 மணிக்கு சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.
முதலிடம்
திருக்கோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கில மொழித்தின போட்டிகள் கடந்த சனிக்கிழமை 04.07.2009 புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.
கலைஞர் கௌரவம்
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் தினம் இன்று சனிக்கிழமை 04.07.2009 அனுஸ்டிக்கப்பட்டது. யூன் 30 ஆம் திகதி பழைய மாணவர் தினம் ஆகும். இவ்வருட ஒன்றுகூடலில் கடந்த வருடம் யப்பானிய புங்கா விருது பெற்றுக் கொண்ட மிருதங்க வாத்திய கலைஞர் சி.காண்டீபன் பொன்னாடை போர்த்தி பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவர் இக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
சுற்றுலா
திருக்கோணமலை கலைமகள் மொண்டுசூரி பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா ஒன்றை நேற்று வியாழக்pழமை (02.07.2009) றே;கொண்டிருந்தனர். இதில் 48 மாணவர்கள் பங்கு கொண்டிருந்தனர். இவர்களுடன் 5 பெற்றேர்களும், 3 ஆசிரியர்களும் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர்.
மேலும் வாசிக்க »
குருளையர்கள் சாரணர்களாக இணைவு
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி (2வது திருமலை சாரணர் குழு) குருளைச் சாரணர்கள் 9 பேர் தமது காலப்பகுதி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (02.07.2009) சாரண் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். மேலும் வாசிக்க »
